அரியலூர் மாவட்டத்துக்குப் போதிய அளவுப் பேருந்து வசதி இல்லாதது ஏன்? - பரப்புரையில் த.வெ.க. தலைவர்
மருத்துவம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் காம்ப்ரமைஸ் இல்லை - த.வெ.க. தலைவர் உறுதி!
அரியலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பரப்புரையில் பேசிய விஜய், தனது கட்சியின் கொள்கைகளை விளக்கினார். மருத்துவம், குடிநீர், ரேஷன், கல்வி, சாலை வசதி, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தமிழக வெற்றிக் கழகம் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.
மேலும், ஏழ்மை, வறுமை, ஊழல், குடும்ப ஆதிக்கம் இல்லாத மற்றும் உண்மையான, மனசாட்சி உள்ள மக்களாட்சியே நம் லட்சியம் என்றும் விஜய் தெரிவித்தார்.
அரியலூரைச் சேர்ந்த ஒருவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தும், இந்த மாவட்டத்துக்குப் போதிய அளவுப் பேருந்து வசதி இன்றுவரை இல்லாதது ஏன்? எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
அரியலூரில் நடைபெற்ற தனது மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது பேசிய விஜய், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மீது நேரடியான விமர்சனத்தை வைத்தார்.
அரியலூரைச் சேர்ந்தவரான அமைச்சர் சிவசங்கர், தனது சொந்த மாவட்டத்திற்கே போதுமான பேருந்து வசதிகளைச் செய்து தரவில்லையென அவர் குற்றம் சாட்டினார்.
விஜயின் இந்தக் கேள்வி, அங்குக் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
