இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது: விபத்தில் சிக்கியும் தப்பிக்க முடியவில்லை! Man arrested for sexually harassing woman in Bengaluru

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது: விபத்தில் சிக்கியும் தப்பிக்க முடியவில்லை! Man arrested for sexually harassing woman in Bengaluru

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது: விபத்தில் சிக்கியும் தப்பிக்க முடியவில்லை!

ஓடும் காரில் இருந்து நாய்க்கு முதலுதவி செய்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!


பெங்களூரு: நாய் ஒன்றுக்கு உதவி செய்ய காரில் இருந்து இறங்கிய இளம்பெண்ணுக்கு, இருமுறை பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், பின்னர் விபத்தில் சிக்கியும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான இளம்பெண்ணின் செயல்பாடு, குற்றவாளியை பிடிப்பதற்கு பெரிதும் உதவியுள்ளது.

பெங்களூருவில் வெப் டிசைனராகப் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், கடந்த 7-ஆம் தேதி ஜக்கூர் மெயின் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கிடந்த ஒரு நாயைப் பார்த்த அவர், உடனடியாக காரை நிறுத்தி நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அதேநேரம், ஸ்கூட்டரில் வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டதால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் திரும்பி வந்த அந்த நபர், இரண்டாவது முறையாகவும் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, ஸ்கூட்டரில் மின்னல் வேகத்தில் பறந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த இளம்பெண்ணும் அவரது நண்பர்களும் அந்த வாலிபரை விரட்டிச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றபோது, ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அந்த வாலிபருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காயமடைந்த வாலிபர் தப்பிச் சென்றுவிட்டார்.

இச்சம்பவம் குறித்து அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் இளம்பெண் அளித்த தகவல்களின் அடிப்படையில், எலகங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த மஞ்சுநாத் (28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 7-ஆம் தேதி மது விருந்தை முடித்துவிட்டு வரும்போது இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks