அடுத்து வரும் 2 புயல்கள்... கனமழை எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! Bay of Bengal Cyclone Tamil Nadu Heavy Rain Warning

அடுத்து வரும் 2 புயல்கள்... கனமழை எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! Bay of Bengal Cyclone Tamil Nadu Heavy Rain Warning

செப். 20 வரை தமிழகத்துக்குத் தொடர் மழை; வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய முன்னறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வரும் 17-ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 18-ஆம் தேதி சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவை மாவட்டங்களுக்குக் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அது அக்டோபர் மூன்றாவது வாரத்திலேயே தொடங்கி ஜனவரி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் உருவாகும் என்றும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks