அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! EPS Furious Speech on AIADMK Rivals

அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! EPS Furious Speech on AIADMK Rivals

அதிமுகவை கவிழ்க்க நினைத்தவர்களையும், தலைமை அலுவலகத்தை உடைத்தவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? 'யார் ஏற்றுக்கொள்வது? - இ.பி.எஸ் ஆவேசம்!

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் தொண்டர்களின் சொத்து என ஆவேசம்; மீண்டும் இணைய வாய்ப்பில்லையெனச் சூசகமான அறிவிப்பு!

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களையும், ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றவர்களையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமா என கடும் வார்த்தைகளால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகச் சாடியுள்ளார். அவரது இந்த அதிரடிப் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் தொண்டர்களின் சொத்து என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, புனிதமாக இருக்கின்ற அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி... அப்படிப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கணுமா? ஒரு கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை, பொதுவெளியில் பேசக்கூடிய அவர்களை எப்படி கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இன்னொருவர், அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும் கட்சியில் சேர்க்கணுமா? இதை எல்லாம் யார் ஏற்றுக்கொள்வது என்று கூறி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளாரென அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது, எதிரணியினருடன் சமரசம் செய்ய இ.பி.எஸ். தயாராக இல்லை என்பதைக் காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.


---

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks