தனியார் விடுதியில் விபச்சார தொழில் செய்து வந்த இளைஞர்கள் மத்தியில் யார் NO.1 என்பதில் மோதல் - சதித்திட்டம்..!

சென்னை:

விபச்சார தொழில் செய்து வந்த கும்பல்களுக்கிடையேயான மோதலில் கை கால்கள் கட்டப்பட்டு இளைஞர் ஒருவர் அடுக்குமாடி வீட்டில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்ட அதிர்ச்சி.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள ஊரப்பாக்கம் கோதண்ட ராம் நகர்…. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டிலிருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்க்க, கை கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கதறிக்கொண்டிருந்தார். தின்உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். உயிர் பயத்தில் அலறி துடித்த இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

 

விசாரணையில், மீட்கப்பட்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பதும், சென்னையில் விபச்சாரம் தொழில் செய்யும் நபருடன் பழக்கம் ஏற்பட்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெட்ட வெளிச்சமானது.

ஹணன் அலி என்பவருக்கு சொந்தமாக துரைப்பாக்கம் மற்றும் திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதியில் விபச்சார தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் வேலை பார்த்து வந்த கோபாலகிருஷ்ணன் விபச்சார தொழிலை முன்னின்று வழிநடத்தி வந்திருக்கிறார். தொழில் அமோகமாக ஓட கோபாலகிருஷணனிற்கும் அவரது கூட்டாளிக்கும் தொழில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை புரிந்து கொண்ட இன்னொரு விபச்சார தொழில் செய்யும் நபர் கோபாலகிருஷ்ணை தன் வசப்படுத்தி பலமடங்கு லாபம் பார்த்துள்ளார். மேலும் கோபாலகிருஷ்ணனை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது SPA விடுதியில் தங்கி வேலை பார்த்து அங்கு விபச்சார தொழிலை வளர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார்.

ஆனால் அதற்கு கோபால் கிருஷ்ணன் மறுத்திருக்கிறார். அதனால் ரகசியம் எல்லாம் வெளியே தெரிந்துவிட்டது என அவரை கொலை செய்ய இரண்டாவது கூட்டாளி திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கோபாலகிருஷ்ணனை 3 அடியாட்களை வைத்து காரில் கடத்தியிருக்கிறார்கள். பின்னர், ஊரப்பாக்கத்தில் உள்ள கோதண்டராமன் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரை அடைத்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, அந்த கும்பல் கோபாலகிருஷ்ணனை விடுதியில் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்ற சமயம் பார்த்து கோபாலகிருஷ்ணன் கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து மீட்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து போலீசாரின் தீவிர வேட்டையில் கோபாலகிருஷ்ணனை கடத்தி கொடுமை படுத்திய ராபின், விபின், அகில் ஆகிய மூன்று பேரையும் பிடித்தனர். அவர்கள் மூவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல்துறையினர் தேடி வரும் விபச்சார தொழில் செய்யும் முக்கிய குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் காவல் துறையினர் வாரம் அல்லது மாதம் ஒரு முறையாவது ஆய்வு நடத்தி இது போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                 – Gowtham Natarajan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk