அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

சென்னை:

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சி பொறுப்பில் வந்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது.  முன்னாள் அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.  வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் மான்னார்குடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.  காமராஜரின் உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  சென்னையில் முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.  சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் உள்ள 49 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பெரிதாக வெடித்து வரும் நிலையில் தற்போது நடத்தப்படும் இந்த ரெய்டு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வரும் 11ம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.

                                                                                                                                   – RK Spark

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?