"3 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்து கொலை" - தாயும் கள்ளக்காதலனும் கைது.!

ஈரோடு:

பெற்ற குழந்தையை கொலை செய்தவருக்கு தாயும் உடந்தையான சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் காசியப்ப பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான திவ்யா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞருடன் திவ்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் நாளடைவில் தகாத உறவுக்குள் குடியேறியிருக்கிறார்கள். இதனையடுத்து திவ்யா தனது குழந்தையை அழைத்துக் கொண்டு ஜெகனுடன் சேர்ந்து மதுரை மாவட்டம் அய்யூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜெகனின் நண்பர் பழனி என்பவர் திவ்யாவின் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை கண்ட திவ்யா ஜெகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சினையில் தூக்கி வீசியதோடு அந்த குழந்தையை கண்மூடித்தனமாக ஜெகன் தாக்கியுள்ளார். இதில் குழந்தை தன் சுயநினைவை இழந்தது. அதன்பின் அவர்கள் மூவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்றபோது வழியிலேயே குழந்தையைப் பேச்சு மூச்சை இழந்தது.

இதனால் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது  உடல்நிலை மிக மோசமாக இருந்ததை அறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி திருச்சியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது. அப்போது இறந்த குழந்தையின் உடலை கூட பெறாமல் தாய் திவ்யா, அவருடன் வந்த கள்ளக்காதலன் ஜெகன் மற்றும் அவரது நண்பர் பழனி ஆகியோர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதன் பின் தலைமறைவாக இருந்த திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெகன் உட்பட மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையின் இறப்புக்கான காரணம் வெட்ட வெளிச்சமானது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குழந்தையின் தாய் திவ்யா, ஜெகன் மற்றும் பழனி ஆகிய மூவரையும் சிறையில் அடைத்தனர்.

தாயே தனது 3 குழந்தையின் இறப்புக்கு உடந்தையான சம்பவம் ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                                 – Gowtham Natarajan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk