மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி; காதல் விவகாரமா.?

சேலம்:

மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவியை மீட்டு தற்போது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். பள்ளி மாணவி தற்கொலை செய்து முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் தான் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மாணவி இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் கலவரமாக மாறி உள்ள நிலையில் இன்று மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முதல் கட்ட விசாரணை பள்ளியிலோ ஆசிரியர்கள் மூலமாகவோ எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, பள்ளி மாணவி நலமுடன் இருப்பதாகவும், குடும்ப பிரச்சனை காரணாமாக இந்த தற்கொலைக்கு முயன்றது செய்ததாகவும் ஜ தெரிய வந்துள்ளது. தற்போது தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சிறப்பு மருத்துவர்கள் மாணவிக்கு தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்தும் வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.

                                                                                                                        – Vijaya Lakshmi 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk