சென்னை:
எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஓபிஎஸ், “எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். என்னை நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை.
கழக சட்டவிதிகளை மீறி தன்னிச்சையாக அறிவித்ததை நான் கண்டிக்கிறேன். அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சட்டரீதியாக உரிய நீதியை பெறுவோம்” என்றார்.
-Prabhanjani Saravanan
in
அரசியல்