அரியலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி சில முகம் தெரியாத நபர்கள் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறார்கள்.

அச்செய்திகளின் மூலம் மக்களை பரிசு கூப்பன்கள் வாங்க தூண்டி மோசடி செய்வதாகவும் தகவல்கள் வரப்பெற்றுள்ளது. எனவே அரசு ஊழியர்களும், பொது மக்களும் விழிப்பாய் இருந்து, அதீத கவனமுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு, இதுபோன்ற போலி குறுஞ்செய்திகளை படித்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!