கள்ளக்குறிச்சி
Kallakurichi Protest: கனியாமூர் பள்ளி கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
Kallakurichi Protest: கள்ளக்குறிச்சியில் அருகில் உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. தனது மகள் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர். ஆரம்பத்தில் சிறிதாக தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் வன்முறையாக வெடித்தது. காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட நிலையில் கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றது. பிறகு பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் கட்டிடங்கள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் உள்ளிட்டவற்றை எரித்து சாம்பலாக்கினர்.
Steps should be taken to control the violence. Shocking visuals#Kallakurichi pic.twitter.com/GN4GIFxYAf
— Stalin SP (@Stalin__SP) July 17, 2022
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பின்பு இந்த போராட்டம் சம்பந்தமாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தந்தனர். மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளியின் கட்டிடங்கள், பேருந்துகள் ஆகியவற்றை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாக்கெட் சாராயத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? போராட்டத்தை தூண்டியது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்றைய தினம் இறந்த மாணவிக்கு இரண்டாவது முறையாக உடல் கூராய்வு நடைபெற்றது. முதல் உடல் கூராய்வு முடிவில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் தங்கள் மகளுக்கு மீண்டும் உடல் கூராய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருந்தனர். நேற்று இரண்டாவது உடல் கூராய்வு நடைபெற்று முடிந்திருந்த நிலையில் மாணவியின் உடலை வாங்கி கொள்ளுமாறு அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
– RK Spark