மேட்டூர்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் இளம் பெண் தர்ஷினி (22). மேட்டூரில் தனது உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக மேட்டூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்தார். அப்போது தனது கைப்பையில் இருந்த ரூ. 8000 மற்றும் செல்போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தர்ஷினி மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பர்தா அணிந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பெண்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் கன்னங்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (34) , மாரியம்மாள் (36) என்பதும் , இவர்கள் இருவரும் இளம் பெண் தர்ஷினியிடம் பணம் மற்றும் செல்போனை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-Raja