கட்டைப்பையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை..! 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்.!!

பொள்ளாச்சி:

24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார், பெண் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ், திவ்யபாரதியின் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, 6 தனிப்படை அமைத்து, விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதற்கிடையில் குழந்தையை கடத்திய மர்மநபர்கள் ஆட்டோவில் தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி சென்ற 2 பெண்கள், கோவை உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறுவதை கண்டறிந்த தனிப்படை போலீசார் குழந்தையை கேரளாவில் மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

                                                                                                                  -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!