தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை 94.68% முதல் தவணை தடுப்பூசியும், 85.47% 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது 21,513 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 40 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே, கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.
–