தமிழகத்தில் இலவச பேருந்து சேவை..!

சென்னை:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, வரும் ஜூலை 25 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு 5 இலவச பேருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த இலவச பேருந்து சேவைகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இலவச பேருந்துகள் அனைத்தும் சென்னை மத்திய கைலாஷில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பேருந்து ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு செல்லும் எனவும், இடையிடையே எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்ளிட்ட 19 இடங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடையும் வரைக்கும் இலவச பேருந்து சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                            -R Mohan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!