சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்,
கெங்கவல்லி போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது 74 கிருஷ்ணாபுரம் தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் மகன் மணி என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் கெங்கவல்லி போலீசார் மணி என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வீட்டில் அறையில் அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதை எடுத்து நாட்டு பறிமுதல் செய்த கெங்கவல்லி காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மணியை தேடி வருகின்றனர்.
– Nallathambi S