"10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை" - சக மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.!

"10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை" - சக மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.!

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 10-ம் வகுப்பு பயிலும் மாணவியை சக மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி, கடந்த மே மாதம் 22-ம் தேதி அதே பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு  முடித்த மாணவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்றுள்ளார். அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், மாணவியுடன் பயிலும் சில மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவியின் பெற்றோரிடம் காட்டிவிடுவதாக, அவருடன் பயிலும் மாணவர்கள் மிரட்டியுள்ளனர். கடந்த 1-ம் தேதி பள்ளி மதிய உணவு இடைவெளியின் போது வீட்டிற்கு அழைத்துச் சென்று 3 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், அதனை வீடியோவாகப் பதிவு செய்து தங்களது நண்பனுக்கும் அனுப்பியுள்ளனர். மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்ததைக் கண்டு சந்தேகமடைந்த அவரது தாய், காரணம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவி நடந்த அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தி சிறுவர்கள் மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் அவர்கள் வீடியோவை அனுப்பிய மாணவர்களின் நண்பனையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான 4 பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

                                                                                                                                   – Chithira Rekha 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks