தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம்..! -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. 98.6 சதவீதத்தினர் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் திருச்சியில் 95 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி முதல் போடும் பணி நிறைவடைந்துள்ளது.

இன்னும் 10 நாட்களில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை கொண்டு வருவோம். நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல தகவல் அறிவிக்கப்படும். நாமக்கல் சித்த மருத்துவ கல்லூரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்த பல்கலைக்கழகங்கள் சென்னையில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனைகள் சரி செய்யப்படும் என்றார்.

                                                                                                                                -R Mohan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!