பொதுத்தேர்வில் மகன் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை.!

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்த அப்புசாமி (45) சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். அவரது மனைவி சுமதி(38) தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய்(15) மற்றும் சந்துரு(13) என்ற 2 மகன்கள் உள்ளனர். சஞ்சய் மயிலம்பாடியில் அரசு பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு முடிவில் 3 பாடத்தில் தேல்வி ஆனதால் அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் டுட்டோரியல் காலேஜில் சேர்த்துவிட்டு உள்ளார். ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அப்புசாமி குடித்து விட்டார்.

வயிற்று வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார்.

                                                                                                    -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!