"தகாத உறவு விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை" - கணவன் மனைவி கைது.!

"தகாத உறவு விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொலை" - கணவன் மனைவி கைது.!

நாகை:

நாகையில் அரங்கேறிய பகீர் சம்பவத்தில் தொடர்புடைய கணவனும், மனைவியும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். 36 வயதான இவர் கப்பலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வேளாங்கண்ணி மாதாகுளம் அருகே உள்ள வினோத் விக்டர் தனக்கு சொந்தமான தனியார் விடுதியை அதே பகுதியைச் சேர்ந்த மதன் கார்த்தி என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார். இதற்கிடையே, வினோத் விக்டரின் மனைவி 36 வயதான மரியா ரூபினா மார்ட்டினா என்பவருக்கும், விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த மதன் கார்த்திக்கிற்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு, கப்பலில் இருந்து இறங்கி விக்டர் வேளாங்கண்ணிக்கு திரும்பினார். அப்போது மதன் கார்த்திக்கிடம் ஒரு வருட கால குத்தகைக்காலம் முடிந்ததால், விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவத்தன்று விடுதி தொடர்பாக பேச்சு நடத்திய பின்னர், வினோத் விக்டர் தனது மனைவியுடன், காரில் நாகையில் இருந்து வேளாங்கண்ணி திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ஓட்டுநர் வைத்து தனது மனைவியுடன், காரில் நாகையில் இருந்து வினோத் விக்டர் வேளாங்கண்ணி திரும்பியுள்ளார்.  இதனைப் பார்த்த மனைவி மரியா ரூபினா மார்ட்டினா மற்றும் ஓட்டுநர் ஆல்வின் ஆகிய இருவரும் இறங்கி ஓடவே வினோத் விகடரின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குதலில் தப்பிக்க முயன்ற வினோத் விக்டர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அவரை விடாமல் தனது நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மதன் கார்த்திக் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே காரை மறிக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் விக்டர் முன்னே வந்து காரை மறித்த மதன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அமுதன் ஆகியோரை அடித்து தூக்கினார். இதனால் இடது கை மற்றும் இடது மார்பு ஆகிய இடங்களில் படுகாயமடைந்த மதன் கார்த்திக் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும், அவருடைய நண்பர் அமுதன் படுகாயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வலது கண்ணில் ரத்தக்காயத்துடன், காருடன் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வினோத் விக்டர் ஆஜராகினார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வேளாங்கண்ணி போலிசார் வினோத் விக்டர் மற்றும் அவருடைய மனைவி மரியா ரூபினா மார்ட்டினா ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ள காதலனை வைத்து கணவரை போட்டுதல்ல மனைவி திட்டம் தீட்டியதும், அதற்கு ஓட்டுநர் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகை அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் வாகனம் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                                        – Gowtham Natarajan

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks