வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் பேரி காளியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் டயர்கள் மேல் சிமெண்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது.
இந்த சம்பவம் வைரலான நிலையில் இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் இந்த பணிகளுக்கு பொறுப்பாளராக இருந்த 3-வது மண்டல உதவி பொறியாளர் பழனியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த திட்ட கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு புதிய ஆட்களை நியமிக்க தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
– Pradeep