தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 23-ம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
தமிழகம் முழுவதும் 11,094 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
– Chithira Rekha