தமிழகத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை.! மாணவர்கள் தான் குறி.!!

கோவை:

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்துள்ளனர்.

அப்போது போதை சாக்லேட் விற்ற சேத்தன் என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். அந்த சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததையும் போலீசார் விசாரணையில் உறுதிசெய்துள்ளனர்.

மேலும் இது போன்று வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

                                                                                                         -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!