ஜாமின் வேணுமா? அப்போ திருமணம் செஞ்சிட்டுவா.! நீதிமன்றத்தில் நடந்த விநோதமான திருமணம்.!!

ஜாமின் வேணுமா? அப்போ திருமணம் செஞ்சிட்டுவா.! நீதிமன்றத்தில் நடந்த விநோதமான
திருமணம்.!!

புதுக்கோட்டை:

ஜாமின் கேட்டு வந்த இளைஞருக்கு நீதிபதி விநோதமான தீர்ப்பை வழங்கியது நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் வயது 22, சத்யா வயது 20 ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மேலும் இவர்கள் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர், இந்த வழக்கு முழுவதும் தம்பதியினர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், முதலில் திருமணத்தை முறைப்படி நடத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், திருமணம் செய்தால் அஜித்துக்கு ஜாமீன் தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து சத்யாவை திருமணம் செய்து கொள்ள அஜித்தும் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இருவரின் திருமணத்தை நடத்தி வைக்க பெண் வழக்கறிஞர் குழுவை நீதிபதி நியமித்தார். இதன்படி இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலிலேயே இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றது. பின்னர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெண் வழக்கறிஞர்கள் மற்றும் ஆண் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அஜித் சத்யாவிற்கு திருமணம் நடத்தப்பட்டது.

இதில் அஜித் மற்றும் சத்யாவின் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை அடுத்து திருமணம் செய்து கொண்ட அஜித்தை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றனர்.

இதை அடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழக்கை முடித்து வைப்பதாகவும், அஜித் சத்யாவுடன் இணைந்து வாழ வேண்டும் எனவும், ஏதாவது பிரச்சனையும் ஏற்பட்டால் சத்யா எப்பொழுது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கூறினார்.

இவ்வாறு நீதிமன்ற வளாகத்திலேயே திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அங்கிருந்தவர்கள் தம்பதியினரை வாழ்த்தினர்.

                                                                                                             – Geetha Sathya Narayanan 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks