முதியவர் இழந்த ரூ. 1 லட்சத்தை மீட்டுக் கொடுத்த போலீசார்.!

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி இபி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி சேமிப்பு கணக்கு காலாவதி ஆகி விட்டதாக வங்கியிலிருந்து அனுப்பியது போல் எஸ். எம். எஸ். வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் எஸ். எம். எஸ்-ல் உள்ள லிங்கை திறந்து பார்த்தார்.

அதில் கேட்கப்பட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் இவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் வங்கியில் சென்று கேட்டபோது அப்படி எந்த ஒரு தகவலும் அனுப்ப வில்லை என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிரபாகரன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் பணம் எந்த வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அந்த கணக்கில் இருந்து பணத்தை மீட்டு பிரபாகரன் கணக்கில் ஒப்படைத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் கூறுகையில் இந்த மோசடி கும்பல் பெரும்பாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதில் சிரமமாக உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                                                            -Naveenraj

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?