சென்னை:
அதிமுக பொதுக்குழு நாளை காலை சென்னை வானகரத்தில் 9.15க்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த முறை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில் இந்த முறை எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்பது நாளை காலை உயர்நீதிமன்றம் 9 மணிக்கு வழங்குகின்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
–
in
தமிழகம்