போலீஸ் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தூக்கில் தொங்கிய இளைஞர்..!

போலீஸ் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தூக்கில் தொங்கிய இளைஞர்..!

தாம்பரம்:

தாம்பரம் அருகே போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்கொலை செய்து கொண்டவர் கொத்தனார் வேலை செய்து வந்தவர் ஆவார்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அதிலும் கடந்த ஒரு வார காலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் தமிழகத் தலைநகர் கொலை நகரமாக மாறி வருகிறது என்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல் காவல்நிலைய கொலைகள் அதிகரித்து விட்டது என்றும் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் சென்னை அடுத்த தாம்பரத்தில் போலீசார் அவமானப்படுத்தியதாக கூறி கொத்தனார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

தாம்பரம் அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்தன் (34) பாண்டியம்மாள் (28) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனந்தன் கொத்தனார் வேலை செய்து வந்தார். பாண்டியம்மாள் அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார், ஆனந்தன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஆனந்தன் வழக்கம் போல மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார் இதனால் பாண்டியம்மாள் இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆனந்தனை அழைத்து கண்டித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்தன் போலீசாரிடம் நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கண்டித்து விட்டு அங்கிருந்து அலட்சியமாக சென்றனர். காவல்துறை தன்னை கண்டித்த மன உளைச்சலில் இருந்து ஆனந்தன் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது  படுக்கை அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks