விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை - அதிமுக ஒட்டிய போஸ்டர்..!

சென்னை:

திமுக அரசு பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு ஆகும் நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சென்னை முழுவதும் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும் மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை ராஜ்பவனில் பதவியேற்றுக்கொண்டது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக சார்பாக மாநிலம் முழுவதும் இன்று கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், கருத்தரங்கங்கள் என மாநிலம் முழுவதும் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையை நிகழ்ச்சிகளாக விளக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சென்னை முழுவதும் “விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை” எனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்களானது, பேருந்து நிறுத்தங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

                                                                                                                                             -க. விக்ரம் 

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!