சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட தேவூர் அருகேயுள்ள சோலைக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (22) என்பவர் காவேரிப்பட்டி கிராமப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 6ம் தேதி குழந்தை திருமணம் செய்து கொண்டதாக சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவிக்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்ததைத்யெடுத்து சங்ககிரி சமூக நல விரிவாக்க அலுவலர் விசாரணை மேற்கொண்டதில் இதில் குழந்தை திருமணம் நடைபெற்றது. உறுதி செய்யப்பட்டு சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.