கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த க. பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1959இல் ஆரம்பிக்கப்பட்டு அறுபது இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது. தற்போது தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து செயல்பட்டு வருகிறது.
50 ஆவது ஆண்டு நிறைவாக இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 68 மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.
மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழில் செல்ல பெயர் சூட்டு விழா, புதிய மாணவர் வரவேற்பு விழா, பாரதி கவிதை மன்றம், டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்றம், கராத்தே, சிலம்பம் போன்ற போட்டிகளில் மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றுள்ளனர்.
தமிழ் மொழியின் பெருமையையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற முறையில் இலக்கியத்தையும்,இலக்கணத்தையும் படிக்க வேண்டும் நமது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெயர்களுடன் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள் தமிழ் இலக்கியத்தின் உடைய நூல்கள் உடைய பெயர்களை மாணவர்களுக்கு சூட்டி இருக்கின்றன அந்த மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் தமிழ் பெயருடன் அவர்களுக்கு அந்த பள்ளியில் படித்த ஞாபகம் துடன் இலக்கியத்தையும் படிக்க வேண்டும் என்ற அந்த ஆர்வம் அந்த மாணவர்களுக்கு வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சியை ஆசிரியர்கள் கையில் எடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மாணவர்களுக்கு ஒவ்வொரு நடைமுறையை ஒவ்வொரு புதுப்புது விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்து வைப்பதால் பள்ளி சிறந்த பள்ளியாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முயற்சி இந்த ஆண்டு தமிழை வளர்க்க வேண்டும் தமிழ் மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த மாணவர்களுக்கு அவர்கள் பெயர்களுடன் தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுடைய பெயர்களில் நூல்களின் பெயர்களையும் மாணவர்களுக்கு சேர்த்து வைத்திருக்கின்றனர். மேலும் பள்ளியில் போதுமான வசதிகள் உள்ளது அதாவது மாணவர்கள் படிப்பதற்காக ஆரோ சிஸ்டம்,கணினி வகைகள் ஸ்மார்ட் கிளாஸ் வசதி மாணவர்களுக்காக பெற்றோர்கள் ஆசிரியர் சங்கம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வாகன வசதி கூட ஏற்படுத்தப்பட்டு.
இப்பொழுது எங்கள் பள்ளியானது கரூர் திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளி சீருடையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான வசதிகள் வளங்களை முன்னாள் மாணவர் சங்கம் மூலம் எஸ்என்சி மூலமும் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியை ஒன்று வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது தமிழக அரசு 1 முதல் பத்தாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்து உள்ளனர்.
பேட்டி:
1.தலைமை ஆசிரியர் மூர்த்தி
2. மாணவர் யோகேஸ்வரன்.
3. வசந்தி,பெற்றோர்.