சேலம்:
நேற்று ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிய செய்தி மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அருகில் உள்ள கிழக்கு மேடு என்ற கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்றை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். கடத்தல் கும்பலிடம் பொதுமக்கள் விசாரித்தபோது நாங்கள் பவானியில் இருந்து வருகிறோம் எங்களுக்கு முதலாளி ராஜேஷ் என்பவர் என்றும் அவர் தினமும் எங்களுக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுப்பார் நாங்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ரேஷன் அரிசி களை சட்டவிரோதமாக கொண்டு வந்து சேர்ப்பது மட்டுமே எங்கள் வேலை என்று கூறினர்.
விரைந்த பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சேலம் உணவு பாதுகாப்பு துறையில் இருந்து சரவணன் எஸ்.ஐ அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றவாளிகள் மற்றும் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் மற்றும் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்வதாக மக்களிடையே வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆம்னி கார் மற்றும் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட இரு நபர்களையும் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.