679 வாகன ஓட்டிகள் மீது வழக்கு...!

சென்னை:

சென்னையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல் பல்வேறு நடவடிக்கைகளை சமீபகாலமாக எடுத்து வருகிறது. ஏற்கனவே, தவறான நம்பர் பிளேட்டுகள், அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் பொருத்திய கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (4ம் தேதி) போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சைடு மிரர் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக வடக்கு போக்குவரத்து காவல் மாவட்டத்தில் 270 வழக்குப் பதிவுகள், போக்குவரத்து தெற்கு மாவட்டத்தில் 200 வழக்குப் பதிவுகள், போக்குவரத்து கிழக்கு மாவட்டத்தில் 209 வழக்குப் பதிவுகள் என மொத்தமாக 679 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல சன் கன்ட்ரோல் ஃபிலிம் எனப்படும் கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி செல்லும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக கார்களை இயக்கியதால் போக்குவரத்து வடக்கு மாவட்டத்தில் 94 வழக்கு பதிவுகளும், போக்குவரத்து தெற்கு மாவட்டத்தில் 100 வழக்கு பதிவுகளும், போக்குவரத்து கிழக்கு மாவட்டத்தில் 98 வழக்கு பதிவுகள் என மொத்தம் 292 வழக்கு பதிவுகள் போக்குவரத்து போலீசாரால் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றாம் தேதி போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஸலைடிங் நம்பர் பிளேட் எனப்படும் தவறான நம்பர் பிளேட் பொருத்தி வாகனம் ஓட்டியதற்காக மே 1 ம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில் 1036 வழக்குகள் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலியெழுப்பும் சைலென்சர், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மீறி வாகன பதிவெண் தகடு பொறுத்தி வாகனம் இயக்கிய 607 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk