மத மாற்ற விவகாரத்தில் அரசு ஏன் விதிமுறைகளை வகுக்கக்கூடாது? -உயர் நீதிமன்றம் கேள்வி..!

சென்னை:

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் பள்ளிகளில் மதமாற்ற முயற்சி நடப்பதாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டதாவது,

தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டும் அரசின் ஆதரவுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ஏப்ரல் 12ம் தேதி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை முட்டியிட செய்த விவகாரத்தில், ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும்,  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்   அறிவுறுத்தி இருந்தாலும், மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும்போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து  வெளியில் வரும்போது, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்றதன் மூலம், மிஷனரிகளுக்கு ஆதரவாகவும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுவது நிரூபணமாவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநில அரசு மத நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைளில் சம்பந்தப்பட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி மனுதாரர் குறிப்பிட்ட திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சம்பவங்களை தொடர்ந்து எந்த கல்வி நிறுவனத்திலும் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் நடந்ததாக எந்த புகாரும் இல்லை என தெரிவித்தார்.

அவ்வாறு புகார் ஏதும் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், எந்தப் பள்ளியில் எந்த தேதியில் மதமாற்றம் என்ற விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஆரம்ப நிலையிலேயே இதை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மனுதாரர் கோரியபடி வழிகாட்டு விதிமுறைகளை அரசு ஏன் வகுக்கக்கூடாது எனவும், அவ்வாறு செய்வதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? எனவும் கேள்வி எழுப்பினர்.

குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது உரிமையாக இருந்தாலும், மதமாற்றம் செய்வது உரிமை அல்ல எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை விரிவான வாதத்திற்காக நாளை தள்ளிவைத்துள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com