இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..!

கேரள:

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(25). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது.

இந்நிலையில், அந்தப் பெண்ணை காதலிப்பதாகக் கூறிய சந்தோஷ் அவருடன் வாட்ஸ் ஆப்பில் ‘சாட்டிங்’ செய்வதும், வீடியோ காலில் அழைத்து பேசுவதுமாக இருந்துள்ளார். அவ்வாறு வீடியோ காலில் பேசும்போது அந்த இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச படங்களை ‘ஸ்கிரீன் ஷாட்’டாக எடுத்து சேமித்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்கு அவரது ஆபாச படங்களை அனுப்பி பாலியல் உறவு கொள்ள அழைத்ததோடு சம்மதிக்காவிட்டால் அந்த படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண். மூணாறு போலீசில் புகார் செய்தார். புகாரை அடுத்து மூணாறு போலீசார் சந்தோஷை கைது செய்தனர். அவரது மொபைல் போனில் அழிக்கப்பட்டிருந்த படங்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மீட்டனர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சந்தோஷ் தேவிகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!