சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்ணேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், இன்று இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட இருவரிடமும், காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின்போது வலிப்பு வந்து, விக்னேஷ் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் விக்னேஷ் மரணம் அடைந்ததாக, அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். சாத்தான்குளத்தில் நடந்த லாக் அப் மரணம் போலவேதான் இதுவும். அதிமுக ஆட்சியில் லாக் அப் டெத் நடந்தபோது கொந்தளித்த திமுக தற்போது என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து பாரபட்சம் காட்டாமல் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., – டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இன்று தலைமை செயலக காவல் நிலையத்ஹ்டின் எழுத்தர் முனாஃப், பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
-க. விக்ரம்