நாளை உணவகங்கள் செயல்படாது..!! மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் மாநாடு.!

சென்னை:

சென்னையில் நாளை காலை மட்டும் உணவகங்களுக்கு செயல்படாது என சென்னை உணவகங்கள் சங்க செயலாளர் ஆர். ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

திருச்சியில் வணிகர்கள் மாநாடு வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், விக்கிரமராஜா கோரிக்கையை ஏற்று ஹோட்டல் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், மதியம் முதல் உணவகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் மு. க. ஸ்டாலின் விருந்தினராக பங்கேற்கும் இந்த மாநாட்டில், எரிபொருள் விலை, காய்கறி உள்ளிட்டவையின் விலையால் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும், வணிக எரிவாயு சிலிண்டரின் கடுமையான விலை உயர்வை கட்டுப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட வாய்ப்புள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!