பீப் பிரியாணிக்கு தடை ஏன்? பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர்..!

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு மாநில பட்டியலின ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அளவான தீயில் மிதமான சூட்டில் பொருமையாக வெந்து, தட்டில் மேல் தம்போட்டு திறக்கும்போது வரும் அந்த வாசனைக்கு ஆம்பூர் பிரியாணி என்று பெயர். உலக அளவில் பிரபலமான இந்த ஆம்பூர் பியாணிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது சீரக சம்பா அரசிதான். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன.

இங்கு சிக்கன், மட்டன், பீப் உள்ளிட்ட இறைச்சிகளை கொண்டு பிரத்தியேகமான சுவையில் பிரியாணி தயாரிக்கப்படும். இந்த பிரியாணிக்காகவே ஆம்பூர் வரை சென்று சாப்பிடும் உணவு பிரியர்களும் உள்ளனர். இந்த நிலையில் இந்த ஆர்பூர் பிரியாணிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக பிரியாணி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகள் மற்றும் பிரியாணிக்கடை உரிமையாளர்கள் தரப்பில் நடத்தப்பட்டது. அப்போது பீப் பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பிரியாணி திருவிழா நடைபெறும் அதே பகுதியில் ஸ்டால் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக பீப் பிரியாணி வழங்குவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூதாகரமாக வெடிக்கத்தொடங்கிய இந்த விவகாரத்திற்கு தீர்வு காண மாநில பட்டியலின ஆணையம் முன் வந்துள்ளது.

இது குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநில பட்டியலின ஆணையம், மாட்டிறைச்சி பிரியாணி மறுக்கப்படுவது தீண்டாமைச் செயல் என்று புகார் எழுந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இது தீண்டாமை செயல் அல்ல என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மழை காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com