உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!

சென்னை:

விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த 19-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், மறுநாள் விசாரணையின் போதே விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட்டார்.

இந்த நிலையில், விக்னேஷின் உடல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், உடல்கூறாய்வு செய்யப்பட்டது. ஆய்வில் நிறைவு பெற்ற நிலையில் சிபிசிஐடி, விக்னேஷ் குடும்பத்தினரிடம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு அறிக்கையை வழங்கியது.

அந்த அறிக்கையில் விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்தது. விக்னேஷின் தலை, கண் புருவம்,   தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது. வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும்,   ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?