'நடிகர்களை நம்பி மோசம் போகாதீங்க...' - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..!

”பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து மோசடியில் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில்,” சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல; மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்” என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

                                                                                                                                           -Laxman

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?