Jai Bhim : ஜெய் பீம் பட சர்ச்சை- சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. உண்மை சம்பவ அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறது. இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பாமக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, பச்சையம்மாள் என்ற பெயர் அந்த காலங்களில் வன்னியர்களுக்கு மட்டுமே வைக்கப்படும் நிலையில் அந்த பெயரை இருளர் சமூகத்தை சேர்ந்தவருக்கு பெயர் வைத்ததன் மூலம் எங்கள் சமூகத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தி உள்ளனர்.

மேலும் வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பான ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா-ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk