SUICIDE : மனைவி இறந்த சோகத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..!

SUICIDE : மனைவி இறந்த சோகத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு
தற்கொலை..!

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மனைவி இறந்த சோகத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, தனது இரண்டு குழந்தைகளையும் ஆனாதையாக்கி விட்டுச்சென்ற பரிதாபம், சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை…

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவாஜீ தெரு பகுதியை சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராஜா [வயது 55].இவர் ஆத்தூர் அரிமா சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு மனைவி தீபா இறந்து விட்ட நிலையில் ராஜா மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இன்னிலையில் தனது இரண்டு குழந்தைகளும் மனைவி தீபா இறந்ததில் இருந்து தனது தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த ராஜா மனைவி தீபா இறந்த மனவேதனையில் வீட்டின் கதவுகளை திறந்து வைத்தபடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதையறிந்த அக்கம், பக்கத்தினர் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் கொண்டிருந்த ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

மனைவி இறந்துவிட்ட நிலையில் தானும் தற்கொலை செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் ஆனாதையாக விட்டு சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks