மகளிடம் அத்துமீறல்.. கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி..!

மகளிடம் அத்துமீறல்.. கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி..!

சென்னை:

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப், பிரீத்தா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். பிரதீப்பிற்குக் குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு பிரதீப் போதையில் இருந்துள்ளார். அப்போது தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரீத்தா கணவனிடம் இருந்து மகளைக் காப்பாற்ற முயன்றதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து கணவன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து பிரீத்தாவை கைது செய்தனர்.

இதையடுத்து மகளைக் காப்பாற்றுவதற்காகத் தற்காப்பிற்காகத் தாக்கியதில் கொலை நடந்துள்ளதால் அவரை விடுவிக்க ஓட்டேரி போலிஸார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்று திருவள்ளூரில் நடந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks