இரு மகள்களுடன் ஆட்டோ ஓட்டுநர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!

இரு மகள்களுடன் ஆட்டோ ஓட்டுநர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!

சென்னை:

மறைமலைநகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் தனது இரு மகள்களுடன் கிணற்றில் இருந்து பிரேதமாக மீட்கப்பட்டார்.

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல் (44). இவரது மனைவி ஜெயந்தி (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (5), பூஜா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஞானவேலை கடந்த 15-ஆம் தேதி முதல் தனது இரு மகள்களுடன் காணவில்லை என அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலைத்தில் நேற்று 18ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது விவசாய கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் இறந்த நிலையில் மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து 3 பிரேதங்களையும் மீட்டு விசாரணை செய்ததில் அது எழும்பூரில் காணமல் போன ஞானவேல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks