மதுரை:
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பார்வையாளராக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இளைஞர் காளை முட்டியதில் பலியானார்.

அவனியாபுரம் யாதவர் தெருவை சேர்ந்த குட்டீஸ் மகன் பாலமுருகன் செம்பூரணி ரோட்டில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது காளை நெஞ்சு பகுதியில் குத்தியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி பலியானார்.
– ஏ சு.இரத்தினவேல்