ஏற்காட்டில் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறல்களை அடித்து துவம்சம் செய்த காவல்துறை டி.எஸ்.பி.தையல்நாயகி..!

ஏற்காட்டில் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறல்களை அடித்து துவம்சம் செய்த காவல்துறை
டி.எஸ்.பி.தையல்நாயகி..!

சேலம்:

சேலம் ஏற்காட்டில் மாட்டுக் கொட்டகையில் போடப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்…

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் கள்ளத்தனமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையில் ஏற்காடு காவல்நிலைய போலீசார் தீவிர வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு, கள்ளச்சாராய புழக்கத்தை ஒழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்காட்டில் உள்ள மாரமங்கலம் பகுதியில் டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையில் ஏற்காடு காவல்நிலைய போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில்,குமார் என்பவரின் வீட்டின் மாட்டுக் கொட்டகையில் இரண்டு பேரலில் சுமார் 400 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த போலீசார் தலைமறைவான குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks