ராமநகர்:
கர்நாடக மாவட்டம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே லாலாஹட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 5 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த திருநங்கைகள் தங்களது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தினர். இதில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் விருந்து நிகழ்ச்சியின் போது ஆனந்த்துக்கும், திருநங்கைகளுக்கும் இடையே பிரச்சினை உண்டானது. அப்போது ஆனந்த்தை திருநங்கைகள் 5 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சென்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 திருநங்கைகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

in
க்ரைம்