பொதுமக்களின் உதவியுடன் பிடிபட்ட திருடனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்.

பொதுமக்களின் உதவியுடன் பிடிபட்ட திருடனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்.

கோவை:

துடியலூர் அடுத்த முத்துசாமி கவுண்டர் வீதி பகுதியை சேர்ந்தவர் காயத்ரி, இவர் துடியலூர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக டெய்லர் ஷாப் நடத்தி வருகிறார், இந்த நிலையில் கடந்து 13ம் தேதி அன்று காலை காயத்ரி 7000 ருபாய் பணத்துடன் தனது கைப்பையை தனது கடையில் வைத்து விட்டு கடையை சுத்தம் செய்வதற்காக உள்ளே சென்றுள்ளார் அப்போது அதனை கவனித்த நபர் ஒருவர் காயத்ரியின் கைப்பையை எடுத்து கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் உடனடியாக சுதாரித்துக் கொண்ட காயத்ரி உடனடியாக சத்தம் போட்டுள்ளார் இவரது சப்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அந்த திருடனை சுற்றிவளைத்து பிடித்தனர்.

உடனடியாக இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவாளியை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் தஞ்சாவூர் மண்ணார்குடி பகுதியை செர்ந்த 31 வயதான மதிவாணன் என்பது தெரியவந்தது, மேலும் காயத்ரி நேற்று புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதிவாணணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks