சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாவந்தெரு பகுதியில் உள்ள கணேஷ் அவர்களின் வீட்டில், கடந்த மூன்று வருடங்களாக பெண் பூனையை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பெண் பூனை ஆனது ஒரு வாரத்துக்கு முன்பாக 6 குட்டிகளை ஈன்றது, தொடர்ந்து பூனைகளை பராமரித்து வந்த கணேஷ்,
அதில் ஒரு ஆண் பூனை ஒரே கண்ணுடன் இருந்துள்ளதை பார்த்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இந்த தகவலை அறிந்த உடன் கணேஷ் அவர்களின் வீட்டிற்கு வந்து அந்த பூனையை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பகுதியில் தாவந்தெரு பகுதியிலுள்ள மக்கள் இந்த பூனையை அதிசயமாக பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
in
தமிழகம்