கொத்து கொத்தாக மயில்களை கொன்ற விவசாயி..!

கொத்து கொத்தாக மயில்களை கொன்ற விவசாயி..!

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிராஜா (57). இவர் திருவண்ணாமலை வனச்சரகம் காட்டுப்பகுதி அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த விவசாய நிலத்தில் தினந்தோறும் மயில்கள் வந்து பயிரை மேய்ந்து செல்வதால் அவற்றை விஷம் வைத்துக் கொள்ள திட்டம் தீட்டி நேற்று அதிகாலை விஷம் கலந்த தீனியை மயில்கள் வரும் பாதையில் வீசி சென்றுள்ளார். அப்போது மேய்ச்சலுக்கு வந்த 1 ஆண் மற்றும் 5 பெண் மயில் என 6 மயில்கள் விஷம் வைத்த தீனியை உண்டு இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மயில்களை மீட்டதுடன் விவசாயி காசி ராஜாவை கைது செய்து வனச்சரக அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks