10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை; திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைப்பு.! தமிழக அரசு அறிவிப்பு..!

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை; திருப்புதல்
தேர்வுகள் ஒத்திவைப்பு.! தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 19ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks